← செய்திகள்

சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு

சம்மாந்துறை · விளையாட்டு · 7 நவம்பர், 2026

சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு. படம் 1 / 6சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு. படம் 2 / 6சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு. படம் 3 / 6சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு. படம் 4 / 6சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு. படம் 5 / 6சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு. படம் 6 / 6

சாய்ந்தமருதில் “LEADER ASHRAFF TROPHY 2026” கிரிக்கெட் தொடர் கோலாகலமாக ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு

*பாறுக் ஷிஹான்*

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடைபெறும் “LEADER ASHRAFF TROPHY 2026” மாபெரும் கிரிக்கெட் சுற்றுத்தொடர் இன்று (07) சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான பாமி மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டிகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர். ஏ. காதர், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான முஷர்ரப் முதுநபின், முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான பிர்தௌஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், போட்டி நடுவர்கள் மற்றும் பெருந்திரளான விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு போட்டிகளை உற்சாகப்படுத்தினர்.