← செய்திகள்

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களில் களமிறங்குகிறது இலங்கை உலமா கட்சி

சம்மாந்துறை · ஊர் நிகழ்வு · 24 நவம்பர், 2026

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களில் களமிறங்குகிறது இலங்கை உலமா கட்சி. படம் 1 / 2கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களில் களமிறங்குகிறது இலங்கை உலமா கட்சி. படம் 2 / 2

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களில் களமிறங்குகிறது இலங்கை உலமா கட்சி

*பாறுக் ஷிஹான்*

எதிர்வரும் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகளை ஒன்றிணைத்து இலங்கை உலமா கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை உலமா கட்சியின் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்ளூராட்சி சபைகளில் தூய்மையானதும் நேர்மையானதுமான மக்கள் சேவையை முன்னெடுக்கும் நோக்கில், கல்முனை மாநகர சபை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபை ஆகிய தேர்தல்களில் மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மற்றும் சமூகப் புத்திஜீவிகளைக் களமிறக்கக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இலங்கை உலமா கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் தகுதியான உலமாக்கள் தங்களைப் பற்றிய முழுமையான விபரங்களைக் கட்சித் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள உலமாக்கள் 077 544 9017 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு தமது விபரங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் என இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.