← செய்திகள்

தாண்டியடியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து- காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

சம்மாந்துறை · ஊர் நிகழ்வு · 7 நவம்பர், 2026

தாண்டியடியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து- காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி. படம் 1 / 2தாண்டியடியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து- காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி. படம் 2 / 2

தாண்டியடியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து- காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

*பாறுக் ஷிஹான்*

அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் இன்று (07) இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் திசையை நோக்கி மீன் பெட்டிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியே தாண்டியடி பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தூண் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்து பலத்த காயங்களுக்குள்ளான இருவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டிக்கும் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாகக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.